துபாய் மற்றும் ஜெய்ப்பூருக்கு இடையேயான விமான சேவை விரைவாக தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது, விமான போக்குவரத்து தொடர்பில் வெளியிட்டிருக்கும் தகவலில், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூருக்கு, துபாயிலிருந்து இயக்கப்பட்ட விமான போக்குவரத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஜெய்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, விமான […]
