ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் ராகுல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் தனது நண்பர்களுடன் சோழவரம் பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏரியில் குளித்த ராகுல் நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் […]
