திருவிழாவை காண வந்த நபர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே குன்னத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை காண்பதற்காக சென்னையில் வசிக்கும் மோகன் என்பவர் தனது மனைவியுடன் வந்துள்ளார். இந்நிலையில் மோகன் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஏரியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோகன் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பெரியதச்சூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த […]
