நண்பர்களுடன் குளித்துகொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு மதுமதி என்ற மனைவியும் பிரதீஷ் மற்றும் மதுமிதா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீஷ் கொசவம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பிரதீஷ் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். இதனைதொடர்ந்து […]
