பாகிஸ்தானில் ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற தட்டா மாவட்டத்தில் கீஞ்சர் ஏரி இருக்கின்றது. அங்கு படகு சவாரி மிகவும் புகழ்பெற்றது. அதனால் நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்லும் படகில் உரிமையாளர்கள் அவர்களுக்கு உயிர் காக்கும் கவச உடைகளை வழங்குவதில்லை […]
