கிராமத்திலுள்ள ஏரியில் ஏராளமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தாமரை குளம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கட்ரமணபுரம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நேற்று காலை அதிகமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கு சென்று பார்த்த பொதுமக்கள் ஆங்காங்கே அரிசியில் ஏதோ கலந்து […]
