சென்னை தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அடுத்த இராமகிருஷ்ண புரத்தை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் விஷாந்த், கோகுல், சுனில் குமார் ஆகிய மூன்று பேரையும் காணவில்லை என்று பெற்றோர் தேடி வந்த நிலையில், சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் அவர்களின் உடைகள் கிடந்ததை பார்த்துள்ளனர். குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ […]
