சென்னையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பொழிந்து வரும் கனமழையினால் பல பகுதிகளில் சாலைகள் நீரில் தேங்கியுள்ளது. அதிலும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை […]
