ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 13-ம் தேதி இரவு நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ […]
