மது வாங்கி கொடுத்து தொழிலாளியிடம் ஏடிஎம் கார்டை பறித்து பணம் திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் வேடர் புளியங்குளத்தில் வசித்து வரும் வீரமணி(24) என்பவர் கப்பலூர் சிட்கோ பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி தோப்பூர் அருகில் உள்ள மதுக் கடைக்கு வீரமணி சென்றிருந்தார். அப்போது மதுக்கடைக்கு வந்த இரண்டு பேர் வீரமணிக்கு மது வாங்கி கொடுத்து […]
