அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஜெர்மன் சேன்ஸலர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு தான் தொலைபேசியில் அழைத்து பேசும் முதல் நபராக ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கல் இருக்க வேண்டுமென்று விரும்பியுள்ளார். ஆனால் அவரோ அமெரிக்கா அதிபரின் அழைப்பை மறுத்துள்ளார். மேலும் ஏஞ்சலா பெர்லினிற்கு வெளியே உள்ள அவரின் கிராமத்து வீட்டில் வார இறுதி நாட்களை செலவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியின் ஓரமாக […]
