ஏஜெண்டிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சங்கர்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறு வியாபாரிகளுக்கு பட்டாசு ஆலையில் இருந்து பட்டாசுகளை வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கர்ராம் ஸ்ரீவில்லிபுத்தூர் வங்கியிலிருந்து அவர் கணக்கில் உள்ள 2 லட்ச ரூபாயை எடுப்பதற்காக வந்துள்ளார். இதனையடுத்து சங்கர்ராம் வங்கியில் இரண்டு லட்ச ரூபாயை எடுத்துவிட்டு வெளியே வந்து இருசக்கர […]
