பாஜக கட்சியின் மாநில துணை தலைவர் ஏ.ஜி சம்பத் விழுப்புரத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்த சாமிக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்போம் என்று கூறினார். ஆனால் ஆட்சியில் அமர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்றுவரை மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக கட்சியின் எம்பி […]
