மொத்த மாணவா் சோ்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாகவுள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலுள்ள 220 பொறியியல்கல்லூரிகள் வருகிற கல்விஆண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஏஐசிடிஇ எனப்படும் அகிலஇந்திய தொழில்நுட்பக்கல்விக் குழுமம் சாா்பாக 2022- 23ஆம் கல்வியாண்டுக்கு கல்வி நிறுவனங்களுக்கான ஒப்புதல் பெறும் விதிமுறைகள் சமீபத்தில் வெளியாகியது. இவற்றில் கல்வி நிலையங்களில் 50%க்கும் குறைவான மாணவா் சோ்க்கை உள்ள பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
