முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தின் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அதேபோல் சென்னை மாநகராட்சி கமிஷனர், […]
