காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி எஸ்.சிங்காரவடிவேல் ( வயது84 ) கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர் 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தஞ்சாவூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
