நடிகர் சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப்புடன் நடிகர் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ள திரைப்படம் “ப்ரின்ஸ்”. இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் முக்கிய வடிவத்தில் நடித்துள்ளார். […]
