எஸ்.கே.எம் எண்ணெய் ஆலையில் வன்முறையில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் நஞ்சை ஊத்துக்குளியில் எஸ். கே. எம் பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்தி குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம் பக்ரிகாயல் அருகே […]
