மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் படத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “ஆடு திருடர்களை 15 கிலோமீட்டர் தனியாளாக துரத்தி சென்றுள்ளார். மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் விவேகமான முறையில் பணியாற்றக் கூடியவர். ஏற்கனவே தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட பூமிநாதன் முதலமைச்சர் பதக்கத்தையும் வென்றுள்ளார் .அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பூமிநாதன் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி அறிவிக்கப்பட்டதற்கு எனது […]
