தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக விற்கு 10% இடங்கள் கூட கிடைக்காமல் படுதோல்வியடைந்துள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளில் 138 பேர் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். அதிமுகவிற்கு இரண்டு தான் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுக பொன்விழா ஆண்டு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எஸ் பி வேலுமணி எம்எல்ஏ, “தேர்தலில் […]
