Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டிற்கு எதிராக…. எஸ்டோனியாவில் 1600 பிரிட்டன் வீரர்கள் குவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டிலிருந்து ராணுவ வீரர்கள் சுமார் 1600 பேர் தற்போது எஸ்டோனியாவிற்கு  சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 1600 இராணுவ வீரர்கள், நேட்டோ நடவடிக்கைக்காக எஸ்டோனியா என்ற ஐரோப்பிய நாட்டின் எல்லை பகுதியிலிருந்து சுமார் 70 மைல் தூரத்தில் இருக்கும் தாபா இராணுவ தளத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ரசாயன குண்டுகளை வீசினாலோ அல்லது எஸ்டோனியா மீது படையெடுதாலோ, உடனே பதிலடி கொடுப்பதற்காக அவர்கள் களமிறங்கியுள்ளனர். நேட்டோ போர்க் குழுவின் தலைமை தாங்கும் லெப்டினன்ட் […]

Categories
உலக செய்திகள்

வான் பரப்பை பயன்படுத்த தடை…. ரஷ்யாவுக்கு அதிரடி தடை விதித்த அண்டை நாடுகள்….!!

ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனின் அண்டை  நாடுகள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது மூன்றாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என்ற மும்முனை தாக்குதலையும் கொடூரமாக நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளையும் தாக்கி அழித்துள்ளனர். இந்த தாக்குதலை ரஷ்யா கைவிட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் இல்லாமல்….. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ‘மினி பஸ்’….!!!!!

எஸ்டோனியா நாட்டில் முதன்முறையாக ஓட்டுனர் இல்லாமல் ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் மினிபஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனம் ஹைட்ரஜன் மூலம் இயங்குவதால் காற்று மாசுபடாது. ஒருமுறை இதில் ஹைட்ரஜன் புல் டேங்க் செலுத்திவிட்டால் சுமார் 7 மணி நேரங்களுக்கு தடையில்லாமல் பயணிக்கலாம். இந்த மினி பஸ்சில் ஒரே நேரத்தில் ஆறு பேர் பயணிக்கலாம். காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளிலும் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |