நாடு முழுவதும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி நடக்க இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் திருப்தியில்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் […]
