காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா அதிக பக்தர்கள் இல்லாமல் எளிய முறையில் நடைபெற்று முடிந்தது. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மாங்கனி திருவிழா காரைக்காலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மாங்கனி திருவிழா மிக எளிய முறையில் பக்தர்கள் யாரும் இல்லாமல் நடைபெற்று முடிந்தது. அதேபோல் இந்த ஆண்டும், கொரோனா இரண்டாம் அலை காரணமாக கோவில்களுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. […]
