எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய வசதியை வழங்கி வருகிறது. தற்போது இணைப்பு பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து உடனடியாக எல்பிஜி இணைப்பை பெறலாம். கேஸ் சிலிண்டரை பெற இப்போது ஆதார் தவிர வேறு எந்த ஆவணத்தையும் நீங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை. எரிவாயு நிறுவனங்கள் புதிய இணைப்புகள் வழங்குவதற்கு பல வகையான ஆவணங்களை கேட்கின்றன. […]
