ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் இந்த ராணுவ கமாண்டர்கள் மாநாடு இன்று தொடங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந் நிலையில் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் எல்லையில் நிலவும் நிலைமை, அச்சுறுத்தல்கள் போன்றவை குறித்து கமாண்டர்களிடம் ஆலோசனை நடத்தி கேட்டறிவார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் எல்லை பிரச்சினைகளில் மேலும் கவனம் செலுத்தி இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனையும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. […]
