ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எல்லை தாண்டி சென்று வேலை செய்வோருக்கு நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வேலை காரணமாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்பவர்கள் இரண்டு நாடுகளிலும் வரி செலுத்துவதினை தவிர்க்கும் வகையில் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. அதேசமயம் இந்த நாடுகளிலிருந்து எல்லை தாண்டி வேலைக்கு செல்வோருக்கு கொரோனா காலகட்டத்தின் போது வீட்டிலிருந்தே வேலை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் வரி செலுத்துவதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் […]
