கேரள மாநிலத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் கேரளா எல்லை பகுதிகளை மூடுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க உத்தரவிட்டுள்ளது. கேரளா தமிழக எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. […]
