மலைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் எல்லைக்குமாரபாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஏரி கரையோரம் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ராமலிங்கபுரம் மற்றும் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 62 பேர் மரம், செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பணியில் ராமலிங்கபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வேப்பமரத்தில் உள்ள கூட்டிலிருந்து மலைத் தேனீக்கள் கலந்ததை பார்த்து பணியில் இருந்தவர்கள் அடித்துப் பிடித்து […]
