இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளதால் அதனை குறிப்பிடும் வகையில் 800 என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். […]
