சீனாவில் காரமான உணவு சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் எலும்புகளை உடைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஹூவாங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் காரமான உணவை உண்டவுடன் கடுமையான இருமல் தொடங்கியுள்ளது. அப்போது அந்தப் பெண்ணின் மார்பில் ஏதோ உடையும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அவர் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சிறிது நாட்களுக்குப் பின் ஹூவாங் பேசுவது மற்றும் சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளார். […]
