நிலத்தில் எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழாத்தூர் பகுதியில் விவசாயியான வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் பயிர்கள் சேதம் ஆகாமல் இருக்க விளைநிலத்தில் உணவு தானியங்களுடன் விஷத்தை கலந்து வைத்துள்ளார். இந்நிலையில் விஷம் கலந்த உணவு தானியங்களை சாப்பிட்ட 4 மயில்கள் நிலத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து இறந்து […]
