உலக அளவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக இந்தியா மாறி வருகிறது. எரிபொருளின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘எலக்டா’ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒன்-மோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் ஒன்-மோட்டா நிறுவனம் Commuta மற்றும் Byka என்று இரண்டுவிதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதையடுத்து தற்போது மூன்றாவது வாகனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. […]
