எலக்ட்ரீசியனை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்லானி காலனியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகானந்தம் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவருக்கு ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்து இருந்தார். அதை வசூல் செய்வதற்காக வி.ஜி.ராம் நகரில் உள்ள சிவா வீட்டிற்கு முருகானந்தம் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்தது. இதனால் முருகானந்தம் சிவா மனைவியின் தோழி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். […]
