வட மேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையில் இருந்த சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். காவல் துறை துணை ஆணையர் (ரோகிணி) பிரணவ் தயல் கூறியதாவது, மீட்கப்பட்ட சடலம் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. கஞ்சவாலாவில் கார் எரிவது குறித்து இன்று காலை 6.40 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து அந்த இடத்தை அடைந்தபோது, மஜ்ரா தபாஸில் இருந்து உயர்நீதிமன்றம் போகும் வழியில் கார் கண்டுபிடிக்கப்பட்டது. […]
