கிணற்றுக்குள் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குத்தகை தோட்டம் பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கருப்பசாமிக்கு சொந்தமான எருமை மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இல்லாத 70 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுத் தண்ணீரில் நீந்தியபடி எருமை மாடு உயிருக்கு போராடியது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு […]
