எரி சாராயம் கடத்திய இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிறுவிடாகம் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தும்படி காவல்துறையினர் சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன் டிரைவர்கள் சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு காவல்துறையினரை கண்டதும் கீழே குதித்து தப்பி ஓடினர். அதன்பின் தப்பி ஓடிய டிரைவர்கள் விட்டு சென்ற சரக்கு […]
