ரஷ்யாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டு சுமார் 33 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபீரியாவில் இருக்கும் நோவோசிபிக்கில் என்ற நகரத்தில் எரிவாயு சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு பணியாளர்கள் எரிவாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு எரிவாயு டேங் வெடித்துச் சிதறிவிட்டது. உடனடியாக அங்கிருந்த பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் பதறியடித்து ஓடியுள்ளனர். நெருப்பு குழம்பானது, சுமார் 1,000 மீட்டர் சுற்றளவிற்கு பரவிவிட்டது. இதில் தொழிலாளர்கள் 33 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. […]
