சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையானது தினசரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் முதல் தேதி மற்றும் 16ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையினால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதியையே நம்பி இருக்கிறது. பெட்ரோல், டீசல் போன்றவை சென்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி […]
