இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசின் சிலோன் பெட்ரோலிய கார்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் சென்ற 27 ஆம் தேதி முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் (ஐ.ஓ.சி.) இலங்கை கிளையான லங்கா ஐ.ஓ.சி.யின் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே பெட்ரோல்-டீசல் விற்பனையானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாத இலங்கை அரசு பதவி விலகக்கோரி போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. […]
