ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் திட எரிபொருள் குழாயுடன் கூடிய ஏவுகணைகளில் பயன்படுத்தக்கூடிய ராம்ஜெட் பூஸ்டரை உருவாக்கியுள்ளது. இந்த பூஸ்டரை புனேயில் உள்ள அதிசக்தி பொருள்கள் ஆய்வகம், ஹைதராபாத் இமாரத் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட டிஆர்டிஓ ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த உந்து அமைப்பு முறை சூப்பர்சானிக் வேகத்தில் ஏவுகணைகளை செலுத்தி வான்வெளி ஆபத்துக்களை இடைமறித்து தகர்க்க உதவும். ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இந்த பூஸ்டரின் பரிசோதனை […]
