புற்களுக்கிடையில் வைத்து ஒருவர் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள கேல்கரி என்ற பகுதியில் உள்ள புற்கள் நிறைந்த பகுதி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அப்போது ஒரு சடலம் ஒன்று எரிந்த நிலையில் புல் வெளிக்கிடையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினருக்கு […]
