எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா சுருட்டல் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (வயது 33) மற்றும் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தில் சிவபிரகாஷ் நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 31) இருவரும் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது இருவரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் இவர்களுடைய குற்றச்செயலை கட்டுப்படுத்த […]
