கொரோனா தொற்றின் 3வது அலையை கடந்து உலகப் பொருளாதாரம் இயல்புநிலைக்கு வரவிருந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக புது சவால்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். ஆா்பிஐ-ன் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையின் வருடாந்திர கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இவற்றில் சக்திகாந்த தாஸ் தொடக்க உரை ஆற்றினாா். அப்போது அவா் […]
