இந்தியாவில் பள்ளிகள் திறக்கும் விதத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப் படுத்தி வருகின்றது. தற்போது வரை 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பு ஊசி […]
