இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவினாலும் கடந்த காலத்தை போன்று மோசமான ஒரு பாதிப்பு தற்போது வராது என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒமிக்ரான் வைரஸ் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பையே அதிகம் பாதிப்படைய செய்வதாக கூறியுள்ளார். ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவவர் பக்க நோய்கள் ஏதும் இல்லாத நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் சாதாரண சிகிச்சையிலேயே குணமடைய முடியும். […]
