எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சுகாதார அமைப்பு ஊசி மருந்து வழங்க முடிவு செய்துள்ளது. எய்ட்ஸ் நோய் முற்றிலும் குணமாக்க முடியாத ஒன்று. ஆனால் இதன் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு நோயாளிகள் தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்த மாத்திரையில் இருந்து விடுதலை பெறும் விதமாக பிரித்தானியாவில் உள்ள NHS என்னும் தேசிய சுகாதார அமைப்பு ஊசி மருந்தை வழங்கவுள்ளது. குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகள் அனைவரும் antiretroviral என்றும் மாத்திரையை தினசரி எடுத்துக் கொள்கின்றனர். […]
