கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் சென்ற முதியவர் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி பனிக்குப்பத்தில் உள்ள கடலுார் திமுக எம்பி ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜ், சக தொழிலாளிகள் வினோத், கந்தவேல், அல்லா பிச்சை, […]
