பிரித்தானியாவில் கன்சர்வேடிங் எம்.பி சர் டேவிட் அமேஸ் தொகுதி மக்களுடனான கூட்டத்தில் பங்கேற்ற போது கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் எசெக்ஸில் உள்ள Southend West தொகுதி எம்.பி சர் டேவிட் அமெஸ் பங்கேற்ற மக்களுடனான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அந்த கூட்டத்திற்குள் நுழைந்து நபர் ஒருவர் சர் டேவிட் அமெஸ்-ஐ கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். […]
