கனிமொழி எம்.பி. நீட் தேர்விற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்று கூறியிருக்கிறார். தி.மு.கவின் எம்பி கனிமொழி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, தி.மு.க. மட்டுமல்லாமல், பல அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்கள் எதிர்க்கும் நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை. எனவே, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து முதல்வர் பல தடவை பேசியுள்ளார். […]
