அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டானது கடந்த 17.10.21 அன்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா திநகர் ஆர்காடு தெருவில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திலுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றியதோடு இல்லாமல் கழக பொதுச்செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதனை கண்டித்து அதிமுக கட்சியின் கழக அமைப்பு செயலாளர் திரு ஜெயக்குமார், கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு பாபு முருகவேல் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாபு முருகவேல், […]
